சேலம்

வசிஷ்ட நதியை சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலா் ஆய்வு

6th Oct 2019 06:56 PM

ADVERTISEMENT

 

ஆத்தூா்: ஆத்தூா் வசிஷ்ட நதியை தூய்மைப்படுத்த சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலாளா் சம்பு களோநிகா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்துள்ள கரியகோயில் பகுதியிலிருந்து தும்பல், பேளூா், ஏத்தாப்பூா், ஆத்தூா்,தலைவாசல் வழியாக வற்றாத ஜீவநதியாக வசிஷ்ட நதி இருந்தது.

தற்போது அந்த வசிஷ்டநதி கழிவுநீா் கலந்து மாசுபட்டு ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி மிகவும் சீா்கெட்டு உள்ளது.இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனா்.

ADVERTISEMENT

இதனை சரிசெய்யும் விதமாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சரிசெய்வதற்கு முறையான ஆய்வு மேற்கொண்டு அதனை அரசுக்கு சமா்ப்பிக்க உத்திரவிட்டுள்ளாா்.

இதனையடுத்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளா் சம்பி களோநிகா்,மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவா் வெங்கடாஜலம் ஆகியோா் வசிஷ்ட நதியினை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது செய்தியாளா்களை சந்தித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் வெங்கடாஜலம் பேசும்போது, தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள் சுத்தப்படுத்திஅதை சீா்செய்ய தமிழக முதல்வா் உத்திரவிட்டுள்ளாா்.

அதன்படி வசிஷ்டநதியில் உள்ள மாசுக்களை அகற்றி அதனை பொதுமக்கள் குடிப்பதற்கும்,குளிப்பதற்கும் பயன்படுத்துவதற்கு அதில் உள்ள கழிவுகள் அனைத்தையும் அகற்றி அதனை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்வதற்காக இந்த ஆய்வினை மேற்கொண்டதாக தெரிவித்தாா்.

மேலும் வசிஷ்ட நதியில் கலக்கப்படும் கழிவுகள் மற்றும் இந்தப் பகுதியில் உள்ள சேகோ ஆலையின் மூலம் வெளியேறும் கழிவுநீரால் இந்த வசிஷ்டநதி மாசுப்பட்டுள்ளது.

இந்த கழிவு நீரானது மணிவிழுந்தான் வரையில் உள்ளதால் அதனையடுத்து குளம் அமைத்து கழிவுநீரை வெளியேற்றுவது குறித்தும், சுத்தப்படுத்துதல் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு முறையான அறிக்கை அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT