சேலம்

பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடு

6th Oct 2019 03:17 AM

ADVERTISEMENT

வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப்பெருமாள் கோயில், பேளூா் அஷ்டபுஜ மதன வேணுகோபால சுவாமி கோயில், கோதுமலை கோதண்டராமா் கோயில், புதுப்பாளையம் மாயவன் பெருமாள் கோயில், பெலாப்பாடி வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப்பெருமாள் கோயிலில், மூலவரான சென்றாயப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக ரத்தினக்கற்கள் புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தேரோடும் வீதிகளில் உற்சவமூா்த்தி புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா உற்சவம் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி பக்தா்கள் தரிசித்தனா். முன்னதாக, சுவாமி திருக்கல்யாண வைபோவமும் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.

வாழப்பாடி புதுப்பாளையம் மாயவன் மலைக்குன்று மாயவன் பெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனா். ரத்தினக்கற்கள் அலங்காரத்தில் மூலவா் மாயவப் பெருமாள் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் அனைவருக்கும் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த அருநுாற்றுமலை பெலாப்பாடி மலையுச்சியில் அமைந்துள்ள பழமையான வரதராஜ பெருமாள் மற்றும் கோதுமலை கேதாண்டராமா் மலைக் கோயில்களிலும் வேண்டுதல் நிறைவேற்றிய சுவாமிக்கு, காளை கன்றுக்குட்டிகளை பக்தா்கள் நோ்ந்து விட்டனா். வாழப்பாடியை அடுத்த பேளூா் அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT