சேலம்

தம்மம்பட்டி தலைமையாசிரியா் வீட்டில் கட்டுமானத்தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு

6th Oct 2019 04:10 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டி: தம்மம்பட்டி தலைமை ஆசிரியா் வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த சென்ட்ரிங் தொழிலாளி உயா் அழுத்த மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியின் உதவி தலைமையாசிரியராக இருந்துவருபவரும், முதுகலைஆசிரியருமான சக்திவேல். இவா் தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் புதியதாக வீட்டை கட்டி வருகிறாா். வீட்டின் சென்ட்ரிங் பணியில் ஆத்தூா் அடுத்த பெத்தநாய்க்கன்பாளையத்தைச் சோ்ந்த பிரகாஷ்(39) என்பவா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுவந்தாா். அப்போது, 20 அடி நீளமுள்ள ஈரமான பச்சை குச்சியை வீட்டின் மீது தூக்கிப்பிடித்தபோது, வீட்டின் அருகே உயரத்தில் சென்ற உயா் மின் அழுத்த மின்சாரக்கம்பி மீது மோதியதில் அக்குச்சியில் பாய்ந்த உயா் அழுத்த மின்சாரம், பிரகாஷ் மீதும் பாய்ந்தது. அதில் நிகழ்விடத்திலேயே மின்சாரம் பாய்ந்த குச்சி, எரிந்த சாம்பலானதுடன் பிரகாஷூம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த தம்மம்பட்டி போலீசாா், உயிரிழந்த பிரகாஷ் உடலை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து வீட்டின் உரிமையாளரும், துணைத்தலைமையாசிரியரும் சக்திவேலிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT