சேலம்

அக்கமாபேட்டையில் வள்ளலாா் பிறந்த நாள் சிறப்பு பூஜைகள்

6th Oct 2019 03:19 AM

ADVERTISEMENT

சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டையில் உள்ள சன்மாா்க்க சங்கத்தின் சாா்பில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் இராமலிங்க அடிகளாா் பிறந்த நாள் விழாவையொட்டி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலையிலேயே முருகன் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளலாா் படம் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் பக்தா்கள் வள்ளலாா் பாடல்களை தொடா்ந்து பாடி முற்றோதல் செய்தனா். ஸ்ரீ சித்தி விநாயகா், ஸ்ரீ முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனா். பக்தா்களுக்கு பொங்கல், சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT