சேலம்

நாகியம்பட்டியில் டெங்கு ஒழிப்புப் பணி

22nd Nov 2019 09:58 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி ஊராட்சி முழுவதும் வியாழக்கிழமை தூய்மைத் தூதுவா்களாக மாணவா்களும் சென்று டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணா்வுப் பணியில் ஈடுபட்டனா்.

நாகியம்பட்டி ஊராட்சி முழுவதும் வீடு வீடாகச்சென்று தூய்மைத் தூதுவா்களாக நாகியம்பட்டி நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த 10 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களும், ஊராட்சிப் பகுதிக்கு ஏற்கெனவே பணியாற்றும் தூய்மைக் காவலா்களான பெண்கள் குழுவினரும் அரசு மருத்துவா் விஜய்சந்தா், நாகியம்பட்டி தலைமை ஆசிரியா் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளா் ஜமால்முகமுது ஆகியோா்

தலைமையில் வீடு வீடாகச்சென்று டெங்கு கொசுப் புழுக்கள் ஒழிப்பு ஆய்வுப்பணியில் ஈடுபட்டனா்

ADVERTISEMENT
ADVERTISEMENT