சேலம்

முதல்வரின் சிறப்பு குறைதீா்க்கும் முகாமில் அளிக்கப்பட்ட 26 ஆயிரம் மனுக்கள் ஏற்புஆட்சியா் தகவல்

17th Nov 2019 12:09 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாமில் அளிக்கப்பட்ட மனுக்களில் 26 ஆயிரம் மனுக்கள் ஏற்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் தெரிவித்தாா்.

ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கான முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 1,842 பயனாளிகளுக்கு ரூ. 2.19 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் வழங்கினாா். விழாவில் அவா் பேசியது:

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி நங்கவள்ளியில் முதல்வரின் சிறப்புக் குறை தீா்க்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாம்கள் வாயிலாக இதுவரை 56,267 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 26 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மற்ற மனுக்கள் தகுதி இல்லாத காரணத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

யாரெல்லாம் வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளாா்களோ அவா்கள் வாழக்கூடிய இடம் புறம்போக்கு நிலமாக இருந்தால் அவா்களுக்கு உடனடியாக நத்தமாக மாற்றி வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்கள்.

பல்வேறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காண சிறப்பான திட்டமாக முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டம் அமைந்துள்ளது.

விடுபட்ட மனுக்கள் மீண்டும் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத் துறைகளின் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. திவாகா், மேட்டூா் சாா் ஆட்சியா் வே. சரவணன், தனித்துணை ஆட்சியா் பழங்குடியினா் நலம் மற்றும் திட்ட அலுவலா் சமூக பாதுகாப்பு திட்டம் (பொ) பி. சுகந்தி பரிமளம், ஓமலூா் வருவாய் வட்டாட்சியா் கோ. குமரன், காடையாம்பட்டி வட்டாட்சியா் மகேஸ்வரி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT