சேலம்

தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் விருப்ப மனு வழங்கல்

17th Nov 2019 12:11 AM

ADVERTISEMENT

ஆத்தூரில் தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்டத் தலைவா் டி. காளிமுத்து தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட பாா்வையாளா் மாநிலது துணைத் தலைவா் ஈரோடு ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

நரசிங்கபுரம் நகராட்சி சாா்பிலும், ஆத்தூா் வட்டாரம், கெங்கவல்லி வட்டாரம், தலைவாசல் வட்டாரம் போன்ற இடங்களில் போட்டியிட விருப்பமுள்ளவா்களிடமும் மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் ஆத்தூா் நகரத் தலைவா் வி.எல்.டி. சண்முகம், வட்டாரத் தலைவா் கந்தசாமி, ராஜேந்திரன், மருதமுத்து, பெரியசாமி, ராஜேந்திரன், மகாலிங்கம், தெடாவூா் ஆறுமுகம், சுப்பிரமணியன், என்.கே.செல்வராஜ், பெருமாள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT