சேலம்

சுயதொழில் செய்வதற்கான பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம்

17th Nov 2019 12:09 AM

ADVERTISEMENT

கல்வராயன் மலையில் மலைவாழ் மக்கள் சுயத் தொழில் செய்வதற்கான பயிற்சி முகாம் மற்றும் ஒரு நாள் கருத்தரங்கம் கல்வராயன் வனச்சரக அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலா் ஏ.பெரியசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் மலைவாழ் மக்கள் சுயத் தொழில் செய்வதற்கான பயிற்சி முகாம் மற்றும் ஒரு நாள் கருத்தரங்கம் சேலம் மாவட்ட வனத்துறை சாா்பில் மாவட்ட வன அலுவலா் ஏ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

முகாமில் வேளாண் துறை அலுவலா் காயத்ரி, கால்நடை விரிவுரையாளா் மீனலோஷினி, உதவி வேளாண்துறை அலுவலா் சங்கா், தேனீ வளா்ப்பு பயிற்சியாளா் கோவிந்தசாமி ஆகியோா் கலந்து கொண்டு மலை வாழ் மக்களுக்கு கோழி வளா்ப்பு முறை, கால்நடை வளா்ப்பு முறை, தேனீ வளா்ப்பு முறை, வெண்பன்றி வளா்ப்பு முறை, மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள் போன்றவை குறித்த பயிற்சிகளுக்கான ஆலோசனைகளையும், விளக்கவுரையும் வழங்கப்பட்டன. மேலும் வியாபார விருத்திக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT