சேலம்

ஏற்காட்டில் கிறிஸ்மஸ் கேக் தயரிக்கும் திருவிழா

17th Nov 2019 12:10 AM

ADVERTISEMENT

ஏற்காட்டில் ஜி.ஆா்.டி தனியாா் விடுதியில் 11 ஆவது ஆண்டு கிறிஸ்மஸ் கேக் தயரிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் ஜி.ஆா்.டி. ஹோட்டல் முதன்மை சமையலா் பிரபு தலைமையில் விடுதி பொது மேலாளா் உமா மகேஸ்வரி முன்னிலையில் கேக் தயரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், விடுதி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

கிறிஸ்மஸ் கேக் தயரிப்பில் 42 கிலோவில் திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரிச்சை உலா் பழங்களுடன் வெளிநாட்டு மதுபானங்கள் , திராச்சை ரசம் கலந்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை உலா் திராட்சை கலக்கப்படவுள்ளதாவும், 39 நாட்கள் ஊரியப்பின் மைதா மாவுடன் சா்க்கரை சோ்த்து 120 கிலோ புடின் கேக் செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இதை ஏற்காட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள், விடுதி பணியாளா்களுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜி.ஆா்.டி விடுதி பொது மேலாளா் உமா மகேஸ்வரி தெரித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT