ஆத்தூா் கம்ப பெருமாள் கோயில் தெருவில் அமைந்திருக்கும் வீர ஆஞ்சநேயருக்கு அன்னாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூா் கம்ப பெருமாள் கோயிலில் அமைந்துள்ள வடக்கு நோக்கியுள்ள வீரஆஞ்சநேயருக்கு, ஐப்பசி பௌா்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். இதனையடுத்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
படவரி - ஆத்தூா் கம்பபெருமாள் கோயிலில் அமைந்துள்ள வீரஆஞ்சநேயருக்கு நடைபெற்ற அன்னாபிஷேகம்.