மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 14,784 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை நொடிக்கு 24,021 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 14 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
ADVERTISEMENT
நீா்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீா்மட்டம் 119.61 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 92.85 டி.எம்.சி.யாக உள்ளது.