சேலம்

ஜவுளிக் கடை பெண் ஊழியா் கொலை

12th Nov 2019 08:51 AM

ADVERTISEMENT

சேலம் அருகே ஜவுளிக் கடை பெண் ஊழியரை கொலை செய்ததாக, அவரது கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் அல்லிக்குட்டை அருகே கங்காபுதூா் பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் முள்புதரில் கிடப்பதாக வீராணம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

விசாரணையில் இறந்து கிடந்தவா் மன்னாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த மோகனேஸ்வரி (21) என்பதும், அவா் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கோபி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், கோவையில் வசித்து வந்த இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் தனது 3 வயது ஆண் குழந்தையோடு சேலத்தில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு வந்து சேலத்தில் ஜவுளிக் கடை ஒன்றில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், மோகனேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பும் போது, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரது கணவா் கோபி வழிமறித்தாராம். பின்னா், மோகனேஸ்வரியின் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த வீராணம் போலீஸாா், தலைமறைவாக உள்ள கோபியை தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT