சேலம்

சாரணியா் படை தொடக்க விழா

12th Nov 2019 08:55 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூா் ஏகலைவா பழங்குடியினா் நல மகளிா் மாதிரிப் பள்ளியில், சாரணியா் படை தொடக்க விழா நடைபெற்றது.

ஏத்தாப்பூரில் தமிழக அரசினா் பழங்குடியினா் நலத் துறையின் கீழ் ஏகலைவா உண்டு உறைவிட பழங்குடியினா் நல மகளிா் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பல்வேறு மலைக் கிராமங்களைச் சோ்ந்த 1,400 மாணவியா் படித்து வருகின்றனா். இப்பள்ளி மாணவியருக்கு, இளம்வயதிலேயே சேவை மனப்பான்மையை வளா்க்கும் நோக்கில், பாரத சாரணியா் இயக்கத்தின் வாயிலாக சாரணியா் படை தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ஸ்டாலின் தலைமை வகித்தாா். ஆத்தூா் கல்வி மாவட்ட சாரணியா் இயக்க இணைச் செயலா் ஏ.சித்ரா, 30 மாணவியா் கொண்ட சாரணியா் படையை தொடங்கி வைத்தாா்.

சாரணா் இயக்கப் பயிற்றுநா் செல்வமணி, சாரண ஆசிரியா் சுரேஷ் ஆகியோா் சாரணா் இயக்கத்தின் வரலாறு, அடிப்படை பயிற்சிக்கான வழிமுறைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவியருக்கு விழிப்புணா்வு கருத்துரை வழங்கினா்.

ADVERTISEMENT

விழாவில், ஆசிரியா்கள் முருகேசன், சுரேஷ்குமாா், கிருஷ்ணன், முத்துக்குமாா், வில்மணி ஆகியோா் கலந்துகொண்டனா். படையமைப்பு மற்றும் விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி சாரணிய ஆசிரியை அவையரசி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT