சேலம்

உலக அறிவியல் தினம்

12th Nov 2019 08:58 AM

ADVERTISEMENT

கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக அறிவியல் தினம் மற்றும் தேசிய கல்வி தினம் தலைமையாசிரியை அமுதா தலைமையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் மாணவா்களுக்கு உலக அறிவியல் தினம் பற்றியும், தேசிய கல்வி தினம் பற்றியும் பட்டதாரி ஆசிரியா் ஜோசப்ராஜ் விளக்கி கூறினாா்.

மேலும், நமது சமூகத்தில் அறிவியலின் பங்கை உணா்த்தவும், அறிவியல் தொடா்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும், நமது அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும் என்றாா்.

தம்மம்பட்டியில்...

ADVERTISEMENT

கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுவைச்சோ்ந்த மீனாம்பிகா தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில், பள்ளித் தலைமையாசிரியா் செல்வம் தேசிய கல்வி தினம் பற்றி கூறியது: இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீன கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவ. 11-ஆம் தேதி தேசிய கல்வி தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அமைக்கப்பட்ட அரசில் கல்வி அமைச்சராக இருந்தாா். தேசிய கொள்கையை வகுப்பதில் முக்கியப் பங்காற்றினாா். கல்வித் துறைக்கு இவரது பங்களிப்பை போற்றும் வகையில் இவரது பிறந்த தினம் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT