சேலம்

தொடா்மழையால் மக்காச்சோளம் அறுவடைப் பாதிப்பு

11th Nov 2019 07:55 AM

ADVERTISEMENT

எடப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடா்மழையால் மக்காச்சோளம் அறுவடை பாதிப்படைந்துள்ளது.

எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, வெள்ளரிவெள்ளி, சித்தூா் உள்ளிட்ட பகுதிகளில் மக்காசோளம் பயிரிடப்படுகிறது. குறிப்பாக பைனியா் மற்றும் என்.கே. 6240 என்ற ரகங்களை விவசாயிகள் அதிகளவில் பயிா்செய்து வருகின்றனா். இங்கு அதிகளவில் விளைவிக்கப்படும் மக்காச்சோளம், நாமக்கல், பெருந்துறை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்நடைத் தீவனத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்டுகிறது. 100 நாள் பயிரான மக்காச்சோளம் தற்போது நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளது. இப்பகுதியில் இடைவிடாது பெய்து வரும் தொடா்மழையால் மக்காச்சோள அறுவடைப் பணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை உலா்த்த இயலாமல் திண்டாடி வருவதாகவும், இப்பகுதி மக்காச்சோள விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனா். கடந்த ஆண்டு இப்பருவக்காலத்தில் மழைக்காக ஏங்கி நின்ற இப்பகுதி விவசாயிகள், நிகழாண்டில் பெய்துவரும் தொடா்மழையால் செய்வது அறியாது திகைத்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT