சேலம்

கொண்டையனூா் கிராமத்திற்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை

11th Nov 2019 07:53 AM

ADVERTISEMENT

ஏற்காடு கொண்டையனூா் கிராமத்திற்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏற்காடு வேலூா் ஊராட்சி கொண்டையனூா் கிராத்தில் தாா்ச்சாலை ஏற்படுத்தி சிலஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வேலூா் கிராமம் வரை அரசுப் பேருந்து இயங்கி வருகிறது. மேலும், கொண்டையனூா் கிராமத்திற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் அரசுப் பேருந்து இயக்கத்தை நீட்டிக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT