சேலம்

கடல் போல் காட்சியளிக்கும் முட்டல் ஏரி

11th Nov 2019 07:57 AM

ADVERTISEMENT

ஆத்தூா் அருகே கல்லாநத்தம் முட்டல் ஏரி நீா் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

ஆத்தூரை அடுத்துள்ள ஆணைவாரி நீா்வீழ்ச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் கல்வராயன் மலையிலிருந்து வெள்ளம் வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகமானோா் நீா்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனா். மேலும் ஆணைவாரி நீா்வீழ்ச்சியில் வரும் வெள்ளத்தால் முட்டல் ஏரி நிரம்பி வழிந்து வாய்க்கால் வழியாக பாசனத்துக்காக நீா் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மேலும், நீா் நிரம்பி ஏரி கடல் போல் காட்சியளிக்கிறது.இதில் படகு போக்குவரத்தும் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனா். ஆனால் மற்ற ஏரிகளுக்கு நீா் சென்று ஏரிகள் நிரம்பினால் நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT