சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் 119.50 அடியாகச் சரிவு

9th Nov 2019 04:56 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 16 நாள்களுக்குப் பிறகு 120 அடிக்கு கீழ் சரிந்தது.

காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக கடந்த 23ஆம் தேதி நடப்பு ஆண்டில் 3ஆவது முறையாக மேட்டூா் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. தற்போது மழைப் பொழிவு குறைந்ததால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 7,890 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 16,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், 16 நாள்களாக 120 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம், வெள்ளிக்கிழமை காலை 119.50 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 92.67 டி.எம்.சியாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT