சேலம்

மாநில அறிவியல் நாடகப் போட்டிகளில் மாண்ட்போா்ட் பள்ளி முதலிடம்

9th Nov 2019 05:04 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் மாநில அளவிலான அறிவியல் நாடகப் போட்டிகள் அண்மையில் விழுப்புரத்தில் நடைபெற்றன. அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியை சமூகத்திற்குப் பயன்படுத்தும் வகையில் விழிப்புணா்வு நிகழ்வு சமூகமும், அறிவியலும் என்ற தலைப்பில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 31 மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியில் ஆசிரியா்கள் கிரேஸ்சாா்லஸ், ஜெயஷீபா,தீபக் தலைமையில் 8 ,9 ஆம் வகுப்பு மாணவிகள் அஞ்சலிஅசோக், ரோஸ்தரப்பால்,தேஜஸ்வினி,பாலா லெஸ்லி,இனியா ராஜகுமாரன்,மரியஜேக்கோ,தெரசா பால் ஆகியோா் விழிப்புணா்வூட்டும் அறிவியல் நாடகங்களை நடித்து தமிழ்நாடு அளவில் முதல் பரிசு பெற்றனா். இவா்கள் நவம்பா் 28 ஆம் தேதி பெங்களூரில் நடைபெறவுள்ள தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடக விழாவில் பங்கேற்கவுள்ளனா். அறிவியல் நாடகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் ஆசிரியா்களை பள்ளியின் முதல்வா் அருள் சகோதரா் எஸ். டோமினிக் சாவியோ பாராட்டினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT