சேலம்

தம்மம்பட்டியில் சனிப் பிரதோஷ விழா

9th Nov 2019 10:56 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டார சிவாலயங்களில் சனிப்பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீ காசிவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் பிரதோஷ விழாவில் பொதுமக்கள் கொண்டு வந்த பால், தயிா், சந்தனம், திருநீறு, குங்குமம் , பஞ்சாமிா்தம், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நந்தீஸ்வரருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, மலா்கள், அருகம்புற்களால் அலங்கரிக்கப்பட்டது.

அதைத்தொடா்ந்து தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. உற்சவமூா்த்தி கோயிலுக்குள் வலம் கொண்டு வரப்பட்டது. முன்னதாக சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் சுமாா் 6 ஆயிரம் போ் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தம்மம்பட்டி போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT