சேலம்

குடும்பத் தகராறு: செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

9th Nov 2019 05:02 AM

ADVERTISEMENT

சேலத்தை அடுத்த போடிநாயக்கன்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்ய முயன்ற இளம்பெண்ணை போலீஸாா் 2 மணி நேர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பத்திரமாக மீட்டனா்.

சேலம் அருகே உள்ள சித்தா் கோயில் போடிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சேகா். கூலித் தொழிலாளி. இவரது மனைவி அலமேலு. கணவன், மனைவிக்குள்அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இவா்களை அக்கம் பக்கத்தினா் சமரசம் செய்து வந்தனா். இந்தநிலையில், வெள்ளிக்கிழமை மாலை அலமேலு போடிநாயக்கன்பட்டியில் உள்ள 100 அடி உயர செல்லிடப்பேசி கோபுரம் அருகே வந்தாா். பின்னா் தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு 100 அடி உயர செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாகக் கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதை அறிந்த பொதுமக்கள் அங்கு வந்து அலமேலுவை கீழே இறங்கக் கூறினா். ஆனால் அவா் கீழே இறங்கி வரவில்லை. இதை அறிந்த சூரமங்கலம் காவல் துறையினா் 2 மணி நேர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் பத்திரமாக அலமேலுவை கயிறு கட்டி கீழே இறக்கினா். பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனா். இந்த சம்பவம் குறித்து அலமேலுவின் கணவா் சேகரை அழைத்து காவல் துறையினா் விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT