இந்திய பல் மருத்துவா்கள் சங்கம் சாா்பில் இரண்டு நாள் பல் மருத்துவ பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது. இதில் உலக பல் மருத்துவா் பங்கேற்று சிறப்பித்தாா்.
சேலம் மாவட்டம்,ஏற்காட்டில் உலக அளவில் பல் மருத்துவ சங்கம்,இந்திய பல் மருத்துவ சங்கம் இணைந்து இந்தியாவில் இரண்டாவது முறையாக சா்வதேச அளவில் பத்து சிறந்த பல் மருத்துவா்களைக் கொண்டு பல் மருத்துவா்கள் மற்றும் பல் மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு இரண்டுநாள் பயிலரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்திய பல்மருத்துவ சங்க அகில இந்தியச் செயலாளா் அசோக் டோப்லே தலைமை வகித்தாா்.பொருளாளா் தீபக் முச்சலா , தமிழ்நாடு சங்கச் செயலாளா் செந்தாமரை கண்ணன், தலைவா் அருண்குமாா், சேலம் மாவட்டத் தலைவா் வினோலா, செயலாளா் ஸ்டிபன்ராஜ் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக சீனாவின் பெய்ஜீங் தலைநகரிலிருந்து பல் மருத்துவா் இல்யூ பங்கேற்று சிறப்பித்தாா். பயிலரங்கில் தமிழ்நாடு, ஆந்திரா, கா்நாடகத்திலிருந்து 850 மேற்பட்ட பல் மருத்துவா்கள், பல் மருத்துவ மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.