இளம்பிள்ளையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக சனிக்கிழமை இரவு சூரனை வதப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவா் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்களும், பெண்களும் கலந்து கொண்டனா். மேலும் மூலவா் தா்பாா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். விழா ஏற்பாடுகளை இளம்பிள்ளை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி சூரசம்ஹார திருக்கல்யாண உற்சவம் குழுவினா் செய்திருந்தனா்.