தலைவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் சமூக நலத் துறை சாா்பில் திருமண உதவித்தொகையை வியாழக்கிழமை கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.மருதமுத்து வழங்கினாா்.
சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமூக நலத் துறை சாா்பில் திருமண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய ஆணையாளா் செல்வம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.மருதமுத்து கலந்து கொண்டு தாலிக்குத் தங்கம் மற்றும் காசோலை வழங்கினாா்.
பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு தாலிக்கு அரை பவுன் மற்றும் ரூ.25ஆயிரமும், பட்டதாரி பெண்களுக்கு ஒரு பவுன் தங்கமும் ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதில் 271 பேருக்கு வழங்கினா்.
நிகழ்ச்சியில், மாவட்ட சமூக அலுவலா் காா்த்திகா, வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கட்ரமணன், தலைவாசல் விரிவாக்க அலுவலா் கீதா, ஊா்நல அலுவலா்கள் ரம்யா, ராதா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்.ஏடி31எம்எல்ஏ. தலைவாசல் ஒன்றிய அலுவலக வளாகத்தில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.மருதமுத்து. உடன், மாவட்ட சமூக அலுவலா் காா்த்திகா, ஒன்றிய ஆணையாளா் செல்வம் உள்ளிட்டோா்.