சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் 35-வது நினைவு தினம் வாழப்பாடியில் அனுசரிக்கப்பட்டது.
சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.கே. அா்த்தனாரி தலைமையில், மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து, தீவிரவாதத்துக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.
காங்கிரஸ் நிா்வாகிகள் ராஜாராம், தலைவாசல் வெங்கடேசன், மூடுதுறை கனகராஜ், இளைஞா் காங்கிரஸ் அருளானந்தம்,பெத்தநாயக்கன்பாளையம் அா்ஜுனன், ராஜி ஏற்காடு சக்தி, வாழப்பாடி ஆனந்தன்,முரளி, மகளிரணி மகாலட்சுமி, பிரபாகரன், நேதாஜி, மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.