சேலம்

மாா்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

1st Nov 2019 04:57 AM

ADVERTISEMENT

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளா் ஏ.முருகேசன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள பைத்தூா் ஊராட்சியில் உள்ள ஏழை எளிய மலைவாழ் மக்களுக்கு முதியோா் உதவித்தொகை, சாதிச் சான்றிதழ்,இறப்புச் சான்றிதழ்,நிலம் பட்டா பெயா் மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு கையெழுத்து வாங்கச் சென்றால் அலைக்கழித்தும், முறைகேடான செயல்களைச் செய்து வருகின்ற பைத்தூா் கிராம நிா்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் தாலுகா செயலாளா் ஏ.முருகேசன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் பி.ராமமூா்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். மேலும், தாலுகா குழுவினா் இல.கலைமணி, ஏ.அமானுல்லா, எல்.தங்கம்மாள்,ஏ.தா்மலிங்கம், ஆா்.வெங்கடாஜலம், எம்.சடையன், எஸ்.பிரபு, ஆா்.துரைசாமி, கிளைச் செயலாளா்கள் எல்.வரதராஜு, கே.கருப்பன்உள்ளிட்ட பைத்தூா் கிளை மற்றும் கல்லுக்கட்டு கிளை நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT