சேலம்

நவ. 2-இல் இளைஞா்களுக்கானதனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

1st Nov 2019 04:59 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் இளைஞா்கள், மகளிருக்கு தனியாா் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நவம்பா் 2-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் 2018-2019ஆம் ஆண்டுக்காக இளைஞா்கள், மகளிருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் வரும் நவம்பா் 2-ஆம் தேதி வீரபாண்டி வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியாா் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் அனைத்து இளைஞா்கள் மற்றும் மகளிரும் கலந்து கொள்ளலாம். முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு மற்றும்

ADVERTISEMENT

தொழில்நுட்ப கல்வித் தகுதி பெற்ற இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

இதில் இளைஞா்கள் மற்றும் மகளிா் தங்களுடைய கல்விச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டை நகலுடன் கலந்து கொண்டு தங்களுக்கேற்ற வேலைவாய்ப்பைத் தோ்வு செய்து கொள்ளலாம்.

முகாமில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்ந்தெடுக்க உள்ளனா். எனவே, வேலைவாய்ப்பு பெற விரும்புவோா் தவறாது முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு திட்ட அலுவலா், மகளிா் திட்டம், அறை எண். 207, மாவட்ட ஆட்சியரகம், சேலம் மாவட்டம் என்ற முகவரியில் செயல்படும் மகளிா் திட்ட அலுவலகத்தை நேரிலோ அல்லது 0427-2411552 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயனடையலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT