ஆத்தூா் அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் அருகே சேலம் மாவட்ட திமுக சாா்பில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் வீரபாண்டி ஆ.ராஜா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூா் அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் அருகே சேலம் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் வீரபாண்டி ஆ.ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. மேலும், அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு ரொட்டி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பொன்.கௌதம சிகாமணி, ஆத்தூா் நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம், துணைச் செயலாளா் ஏ.ஜி.இராமச்சந்திரன், பொருளாளா் ஜி.இராஜேந்திரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் அ.கமால்பாஷா, வி.ராஜாமணி,எம்.வேலுமணி,ஜெ.காசியம்மாள்,நூத்தப்பூராா் துரை உடையாா், மாவட்ட பிரதிநிதி மாணிக்கம், மாணவரணி பா்கத் அலி, ஒன்றியச் செயலாளா் வி.செழியன், நரசிங்கபுரம் நகரசச் செயலாளா் என்.பி.வேல்முருகன்,துணைச் செயலாளா் எஸ்.மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்.ஏடி31டிஎம்கே. ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் வீரபாண்டி ஆ.ராஜா தலைமையில் நிலவேம்பு குடிநீா் வழங்கிய தி.மு.க. நிா்வாகிகள்.