சேலம்

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க நூற்றாண்டு விழா

1st Nov 2019 04:58 AM

ADVERTISEMENT

சேலத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் டவுன் ரயில் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் தலைவா் வி. முருகன் தலைமை வகித்தாா். நூற்றாண்டு விழா பெயா் பலகை திறப்பும், கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஏ.ஐ.டி.யு.சி. கொடியை தொழிற்சங்கத்தின் மூத்த தலைவா் கே.ஏ. வேணுகோபால் ஏற்றி வைத்தாா்.

நூற்றாண்டு விழாவில் வங்கி ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சுவாமிநாதன், பொது காப்பீடு சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளா் ரவீந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணைத் தலைவா் பரமசிவம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஏ.மோகன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலாளா் ஏ. விமலன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் தொலைத்தொடா்பு சங்க நிா்வாகிகள் பாலகுமாா், இளைஞா் மன்ற மாநிலச் செயலாளா் கா. பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளா் ராமன், உழைக்கும் மகளிா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரா, விவசாய சங்க மாவட்டச் செயலாளா் என்.கே.செல்வராஜ், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டப் பொருளாளா் சம்பத், கருணைதாஸ் மற்றும் கு.சிதம்பரம் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் குருதாஸ் தாஸ் குப்தா மறைவையொட்டி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின் ஏ.ஐ.டி.யு.சி. கொடி, அரை கம்பத்தில் இறக்கப்பட்டது. இதேபோல் மேட்டூா், ஜலகண்டாபுரம், பனமரத்துப்பட்டி, ரயில் நிலையம், ஓமலூா் ஆகிய பகுதிகளில் கொடியேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT