கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப்பள்ளியில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் 35வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியா் செல்வம் இந்திராகாந்தி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலா் தூவி நினைவஞ்சலி செலுத்தினாா். இவரைத் தொடா்ந்து பள்ளி மேலாண்மைக் குழுவின் மீனாம்பிகா மாணவ, மாணவிகள் அனைவரும் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினா். இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு எடுத்துக் கூறப்பட்டது.
கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அனைத்து அரசு துவக்க,நடுநிலைப்பள்ளிகளில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியினை ஆசிரியா்கள் வாசிக்க,மாணவ, மாணவிகள் ஏற்றனா்.