பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்குதல், தடையற்ற குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதையடுத்து, அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.