சேலம்

வீரகனூர் பேரூராட்சி முற்றுகை

31st Jul 2019 09:23 AM

ADVERTISEMENT

கெங்கவல்லி அருகே வீரகனூர் பேரூராட்சிக்குள்பட்ட 15-ஆவது வார்டு சொக்கனூர் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து, அப் பகுதியினர் செவ்வாய்க்கிழமை வீரகனூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 பொது மக்களிடம் வீரகனூர் பேரூராட்சி நிர்வாகத்தினர், புதிய திட்டங்கள் வகுத்துத் தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரமாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து, சொக்கனூர் பகுதி மக்கள் கூறியதாவது:
 எங்கள் பகுதிக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் குடிநீர் கிடைப்பதே, மிகவும் அரிதாக உள்ளது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் வேலைக்குச் செல்லும் பெண்களும் ஈரத் துண்டை தண்ணீரில் நினைத்து முகத்தையும் உடலையும், துடைத்துக் கொண்டு செல்லும் அவல நிலையில் உள்ளோம், தண்ணீர் இல்லாமல் நாங்கள் படும் துயரம் அதிகாரிகளுக்கு புரிவது இல்லை. இதனால், வீரகனூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டோம் என்றார் அவர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT