சேலம்

தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி ஆக. 3-இல் உள்ளூர் விடுமுறை

31st Jul 2019 09:21 AM

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளான தமிழ் மாதம் ஆடி 18-ஆம் நாளை முன்னிட்டும், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
 இந்த விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலர்கள் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள மாவட்ட மற்றும் சார்நிலை
 கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
 மேலும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி சனிக்கிழமை அரசு விடுமுறை தினமாக உள்ளதால் அதற்கு ஈடான பணி நாளாக வேறொரு நாளினை அறிவிக்க தேவை ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT