கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசுத் தொடக்கப் பள்ளியில் கார்க்கில் வெற்றி தினவிழா, உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினவிழா மற்றும் சர்வதேச புலிகள் தினவிழா ஆகிய முப்பெரும் விழா பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வம் தலைமையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. கார்கில் தினம் பற்றி ஆசிரியை ஜெயமணி, உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் பற்றி ஆசிரியை கல்பனா, சர்வதேச புலிகள் தினம் பற்றி ஆசிரியை தமிழ்ச்செல்வி பேசினர். பள்ளி மேலாண்மைக் குழுவின் மீனாம்பிகா நன்றி கூறினார்.