சேலத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்துப் பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற இளைஞரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள திருமலை நகரில் தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துப் பணத்தைக் கொள்ளை அடிக்க முயற்சி நடந்தது. இதுதொடர்பாக துணை ஆணையர் பி.தங்கதுரை மேற்பார்வையில் உதவி ஆணையர் ஈஸ்வரன் மற்றும் கிச்சிபாளையம் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட காவலர்கள் விசாரித்து வந்தனர். இதனிடையே ஏடிஎம் மையத்தில் உள்ள கேமராவில் பதிவான படங்களை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக சேலம் கிச்சிப்பாளையம் பாத்திமா நகரைச் சேர்ந்த இளைஞரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.மேலும், அவர் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த ஸ்க்ரூ டிரைவர் மற்றும் தொப்பி, கட்டிங் பிளேயர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.