ஏற்காடு வணிகர் நலச் சங்க பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ஜி. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் ஆர். ஜெயராமன், பொருளாளர் எல்.ஆர். பாலாஜி முன்னிலை வகித்தனர்.
பொதுக் குழுவில் பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி பொருள்களை கொள்முதல் செய்து விற்பனை செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வணிக சங்க நிர்வாகிகள், வணிகர்கள் கலந்து கொண்டனர்.