சேலம்

போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநாடு: சங்ககிரியில் வேன் பிரசாரம்

18th Jul 2019 04:50 AM

ADVERTISEMENT


சிஐடியு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் திருநெல்வேலியில் நடைபெறும் மாநில மாநாட்டையொட்டி, சங்ககிரி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் புதன்கிழமை வேன் பிரசாரம் நடைபெற்றது. 
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலர் டி.செல்வகுமார் திருநெல்வேலியில் ஜூலை 21 முதல் 23 வரை நடைபெறும் 14-ஆவது மாநில மாநாட்டின் நோக்கம் குறித்தும், விபத்தில்லாமல் இயக்குவது, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், பொது போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும், போக்குவரத்துக் கழகங்களுக்கு நடைபெறும் நிதிநிலை பேரவைக் கூட்டத்தில் நிதி வழங்கக் கோரியும், போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தியும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது என்றார்.
சேலம் கோட்ட செயலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தலைவர் கே.சம்பத், பொருளாளர் எம்.சேகர், துணைச் செயலர் கிருஷ்ணன், சங்ககிரி வட்டக்கிளை தலைவர் தனபால், நிர்வாகிகள் குமார், சக்திவேல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாட்டை குறித்து வேனில் ஒளிபரப்பிய காணொளிக் காட்சிகளை அவர் தொடக்கி வைத்தார். செவ்வாய்க்கிழமை ஒசூரில் இருந்து புறப்பட்ட வேன் பிரசாரம், கிருஷ்ணகிரி, சேலம், ஓமலூர், தாரமங்கலம், எடப்பாடி வழியாக சங்ககிரி வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து திருச்செங்கோடு புறப்பட்டுச் சென்றது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT