சாலை விபத்தில் வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தார்.
சேலம் அரியானூர் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் மரம் அறுக்கும் தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளியாக பிகாரைச் சேர்ந்த பிரகாஷ் ராம் மகன் சோட்டு ராம் (33) பணியாற்றி வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று விட்டு மீண்டும் மில்லுக்கு நடந்து சென்றாராம்.
அப்போது, சீரகாபாடியில் இருந்து அரியானூர் நோக்கி 4 வழிச்சாலையில் சென்ற கார் எதிர்பாராத விதமாக சோட்டு ராம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சோட்டு ராமை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.