மேச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜமுனா மகேஸ்வரி வரவேற்றுப் பேசினார். மாவட்டக் கல்வி அலுவலர் விஜயா முன்னிலை வகித்தார். மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மேச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வெள்ளார் அரசு மேல்நிலைப் பள்ளி, குள்ளமுடையானூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 5 அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் 2,034 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை மேட்டூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.செம்மலை வழங்கினார்.
இந்த விழாவில் மேச்சேரி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் சந்திரசேரகன், பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜே.குமார், பெற்றோர் - ஆசிரியக் கழக தலைவர் முருகானந்தம், மேச்சேரி ஒன்றிய பாசறை செயலாளர் செல்வம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மணிவண்ணன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சாமிநாதன், சின்னத்தம்பி, அதிமுக பேரூர் செயலாளர் மாணிக்கம், சிவகுமார், முருகேசன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சங்ககிரியில்...சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 6 அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் 951 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்ககிரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜா தலைமை வகித்து, சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் 270, சங்ககிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 218, நட்டுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளிக்கு 85, வடுகப்பட்டி மாதிரிப்பள்ளிக்கு 96, தேவூர் மேல்நிலைப்பள்ளிக்கு 219, அரசிராமணி மேல்நிலைப்பள்ளிக்கு 63 மடிக்கணினிகள் என மொத்தம் 951 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசினார்.
சங்ககிரி மாவட்டக் கல்வி அலுவலர் என்.ராமசாமி, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர்கள் சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆர்.செல்லப்பன், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்எம்எஸ்.மணி, தலைமையாசிரியர்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (பொறுப்பு) ஏ.ராஜன், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (பொறுப்பு) எம்.சக்திவேல், நட்டுவம்பாளையம் வி.சோமசுந்தரம், வடுகப்பட்டி எம்.அர்ச்சுனன், தேவூர் வி.தமிழ்ச்செல்வன், அரசிராமணி எ.சங்கமித்திரை, ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வரவேற்றார். தேவூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நன்றி கூறினார்.