சேலம்

தனியார் பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

15th Jul 2019 09:48 AM

ADVERTISEMENT

ஆத்தூர் பாரதியார் கல்வி நிறுவனங்களில் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும்,  தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்துவதற்கான விழிப்புணர்வு முகாம் நகராட்சி சார்பில் அண்மையில் நடைபெற்றது.
ஆத்தூர்  நகராட்சிப் பகுதியில் வீடு வீடாக குப்பைகள் பிரித்து கொடுப்பதின் அவசியம் குறித்தும்  மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆத்தூர் பாரதியார் மேல்நிலைப் பள்ளி மற்றும் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆத்தூர் நகராட்சி ஆணையர் ஆர்.சரஸ்வதி உத்தரவின்பேரில் நகராட்சி  துப்புரவு அலுவலர் என்.திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் ஆர்.பிரபாகரன், எம்.செல்வராஜ் மற்றும் தூய்மை பாரத இயக்கப் பணியாளர்கள்  இணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இந்த  முகாமில் பொதுமக்கள் குப்பைகளை பிரித்து கொடுப்பதின் அவசியம் குறித்தும்,  மாணவர்கள்  ஒத்துழைப்பு நல்கும்படியும், தடைசெய்யப்பட்ட  நெழிகிப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT