சேலத்தில் படைப்பாளர் பேரவை சார்பில் இலக்கிய விழா அண்மையில் நடைபெற்றது.
சேலம் சிவில் இன்ஜினியரிங் அசோசியேசன் அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத் தலைவர் பூமிபாலன் தலைமை வகித்தார். இதைத் தொடர்ந்து, எழுத்தாளர் இலா.வின்சென்ட் தலைமையில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.
விழாவில் செயலர் சூர்யநிலா, பொருளாளர் ஆ.ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.