நரசிங்கபுரம் நகராட்சி வாரச் சந்தையில் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இளைஞர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திய நிகழ்ச்சியில், துணிப்பைகளை நகராட்சி ஆணையாளர் கா.சென்னுகிருஷ்ணன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வாரச்சந்தைக்கு வந்திருந்தோர், வியாபாரிகளிடம் துணிப்பையை எடுத்துவந்து பொருள்கள் வாங்க வேண்டியதன் அவசியம் விளக்கப்பட்டது.