சேலம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

4th Jul 2019 09:33 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், விவசாய நகைக் கடன் பணத்தை முறைகேடான முறையிலும், நகைக் கடன் நகையை வாய்தா தேதி முடிவதற்குள் ஏலம் விடுவதைக் கண்டித்தும், தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தம்மம்பட்டி செயலர் சிவாகணேசன் தலைமை வகித்தார். திமுகவைச் சேர்ந்த ராஜா முன்னிலை வகித்தார். தம்மம்பட்டி விவசாய தொழிலாளர் சங்க கெங்கவல்லி வட்டாரத் தலைவர் வெங்கடாசலம், வங்கியில் அடகு வைக்கப்படும் நகைகளில் மோசடி நடப்பது குறித்து விரிவாக பேசினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT