சேலம்

கருணாநிதி பிறந்த நாள், நன்றி அறிவிப்பு கூட்டம்

4th Jul 2019 09:33 AM

ADVERTISEMENT

ஏற்காட்டில் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் காந்தி பூங்கா அருகில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் ஏ.டி.பாலு தலைமை வகித்தார். திமுக ஊராட்சி செயலர் அண்ணாதுரை, பொருளாளர் அருணாசலம், திமுக நிர்வாகிகள் சுப்பையா, விஜயகுமார், வெங்கடசலம் முன்னிலை வகித்தனர். 
திமுக தலைமை கழகப் பேச்சாளர் பவானி கண்ணன் சிறப்புரையற்றினார். பொதுக்கூட்டத்தில் திமுக கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT