சேலம்

உயர்கோபுர மின் விளக்குகளை ஒளிரச் செய்ய கோரிக்கை

4th Jul 2019 09:32 AM

ADVERTISEMENT

உயர்கோபுர மின் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சங்ககிரி பேரூராட்சிக்குள்படட் பழைய எடப்பாடி சாலை நல்லப்பநாயக்கன் தெரு வழியாக அரசு, தனியார்  பள்ளி, கல்லூரி மாணவியர், பல்வேறு அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் பணிகள் முடிந்து செல்கின்றனர். தனியார் நூற்பாலை வாகனங்கள், இருசக்கர வாகனங்களும் அதிகளவில் அப்பகுதியை கடந்து செல்கின்றன.
மேலும், அப்பகுதியில் இரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளும், அங்காளம்மன் கோயில், சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலுக்கும் செல்ல பக்தர்கள் அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக உயர்மின் கோபுரத்தில் உள்ள மின் விளக்குகள் ஒளிராததால் பெண்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் அப்பகுதியைக் கடந்து செல்ல சிரமமடைந்து வருகின்றனர். 
எனவே,  பழுதடைந்த மின்விளக்குகளை ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரூராட்சி நிர்வாகத்துக்கு இப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT