சேலம்

அரசு மருத்துவமனைக்கு ரத்த சேகரிப்பு இயந்திரம் வழங்கல்

4th Jul 2019 09:34 AM

ADVERTISEMENT

எடப்பாடி பகுதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அரசு மருத்துவமனைக்கு ரத்த சேகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திரைப்பட நடிகர் விஜய்யின் 45-ஆவது பிறந்த நாளையொட்டி, எடப்பாடி நகர விஜய் மக்கள் இயக்தின் சார்பில் பல்வேறு மக்கள் நலப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு ரூ.80 ஆயிரத்தில் ரத்தங்களை சேமித்து வைக்கும் வகையிலான குளிர்சாதன இயந்திரம் மற்றும் மானிட்டர் கருவி வழங்கப்பட்டது. தலைமை மருத்துவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஒன்றியத் தலைவர் ஆதிகேசவன், மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் பார்த்திபன் ஆகியோர் ரத்த சேகரிப்பு இயந்திரத்தை மருத்துவமனைக்கு வழங்கினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT