சேலம்

600 தனிநபர் கழிவறைகள் மக்களிடம் ஒப்படைப்பு

2nd Jul 2019 08:18 AM

ADVERTISEMENT

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 1.26 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 600 தனிநபர் கழிவறைகளை மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் பொதுமக்களிடம் ஒப்படைத்தார்.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 4,587 தனிநபர் கழிவறைகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. 
இதற்கான மானியத் தொகை ரூ. 8 ஆயிரம் மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு, இதுவரை 3,927 தனிநபர் கழிவறைகள் ரூ. 3 கோடியே 14 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிட்டில் கட்டி முடிக்கப்பட்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. 
இந்த நிலையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம், பெறு நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு நிதி உதவியின் கீழ் 600 தனிநபர் கழிவறைகளை வாஸ் நிறுவனம் மூலம் கட்டி கொடுப்பதற்கு ஒப்புதல் வழங்கியது.  
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மத்திய மாநில அரசுகள் மற்றும் சேலம் மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் மானிய தொகையான ரூ. 8 ஆயிரத்துடன், ஒவ்வொரு கழிவறை
களுக்கும் கூடுதலாக  ரூ. 13 ஆயிரம் வீதம் 600 தனிநபர் கழிப்பிடங்களுக்கு  ரூ. 78 லட்சம் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் மத்திய மாநில அரசுகள் மற்றும் மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் மானிய தொகையான ரூ.8 ஆயிரத்துடன் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வழங்கிய ரூ.13 ஆயிரம் என மொத்தம்  ரூ.21 ஆயிரம்  மதிப்பீட்டில் 600 தனிநபர் கழிவறைகள் ரூ.1 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு  திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளன. 
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட 4,587 தனிநபர் கழிவறைகளில் 4527 தனிநபர் கழிவறைகள் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
மேலும் மீதமுள்ள 60 தனிநபர் கழிவறைகளை நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவுக்குள் கட்டிமுடித்து பொது மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என ஆணையாளர் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளார். 
நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மருத்துவர் கே. பார்த்திபன், உதவி ஆணையாளர் ம. சுந்தரராஜன், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சேலம் மண்டல மேலாளர் ஜி. விக்ரம், தனி அலுவலர் கெளசிக் மற்றும் வாஸ் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சி. சுப்ரமணியன், சுகாதார அலுவலர் எஸ். மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் வி. சரவணன், கே. பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT