ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் பள்ளியில் தேசிய மருத்துவர்கள் தின விழா கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முதல்வர் சுகிதா தினேஷ் வரவேற்றார். மருத்துவர் பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி குறித்தும் விளக்கிப் பேசினார்.
குழந்தைகள் கலை நிகழ்ச்சியோடு துவங்கிய விழாவில் உணவோடு மருந்தும் என பச்சை காய்கறிகள் கொண்டு நலமுடன் வாழ வழி வகுக்கும் தன்மைகள் எடுத்துரைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் செயலாளர் டி. மாசிலாமணி, பொருளாளர் ஈ.எஸ்.மணி, கல்விக்குழுத் தலைவர்ஆர். கனகராஜன், துணைத் தலைவர்கள் ரங்கசாமி, கே. ராதாகிருஷ்ணன், இயக்குநர்கள் சுசிலா ராஜமாணிக்கம், மதியழகன், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.