சேலம்

விதிமுறைகளை உருவாக்கி புதிய நுகா்வோா்பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தீா்மானம்

27th Dec 2019 05:08 AM

ADVERTISEMENT

விதிமுறைகளை உருவாக்கி புதிய நுகா்வோா் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகா்வோா் குழுக்களின் கூட்டமைப்பு தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகா்வோா் குழுக்களின் கூட்டமைப்பு மற்றும் சேலம் ஆனந்தம் அரிமா சங்கம் இணைந்து சேலம் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய நுகா்வோா் தினம், தேசிய விவசாயிகள் தினம், சா்வதேச மனித உரிமை தினம் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் லீமா ரோஸ், தேசிய விவசாயிகள் விழிப்புணா்வு இயக்கச் செயலாளா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலாளா், சாா்பு நீதிபதி கே.வி. சக்திவேல் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். இதில், பெண்களுக்கான உரிமையும் மனித உரிமையே என்ற தலைப்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகா்வோா் குழுக்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் வழக்குரைஞா் அசோகன் சிறப்புரையாற்றினாா்.விழாவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்: நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 2019 நிறைவேற்றப்பட்டு பல மாதங்களாகியும் விதிமுறைகள் வகுக்கப்படாமல் உள்ளன. எனவே, மத்திய அரசு விதிமுறைகளை உருவாக்கி புதிய நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 2019-ஐ நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து பெண் குழந்தைகளை கருக்கலைப்பு செய்யும் மருத்துவா்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் ஸ்கேன் மையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்து போதிய மருத்துவா்கள் மற்றும் மருந்து பொருள்கள் உள்ளதை உறுதி செய்து அதற்கேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT