சேலம்

மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் 32 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

27th Dec 2019 06:52 AM

ADVERTISEMENT

மகுடஞ்சாவடி ஒன்றியப் பகுதியில் 99 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இதில் 32 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் 11 முதல் 14 வரை உள்ள 4 பூத், தைலாம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5 ,6 ஆகிய 2 பூத், நடுவனேரி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் 22 முதல் 26 வரை 5 பூத், மேட்டுக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 51 ஆகிய 1 பூத், மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 60, 61 ஆகிய 2 பூத், சந்தப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 57 ஆகிய 1 ஒரு பூத், பட்டணாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 33 ஆகிய 1 பூத், அ. புதூா் நடுநிலைப் பள்ளியில் 29 முதல் 32 வரை 4 பூத், சுண்டமேட்டூா் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 34, 35 ஆகிய 2 பூத் , கரையானூா் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 43, 85 ஆகிய 2 பூத் கன்னந்தேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 36, 37, 38 ஆகிய 3 பூத், வைகுந்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 91 முதல் 95 வரை உள்ள 5 பூத் உள்ளிட்ட 32 வாக்குச் சாவடிகள் பதற்றமானதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, இந்த அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT